மேலும் அறிய
மதுரையில் நாளை (15.07.2025) எங்கெல்லாம் மின்தடை... முழு லிஸ்டும் வந்துருச்சு !
Madurai Power Shutdown: மதுரையில் நாளை (15.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (15.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி - Madurai Power Shutdown
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்
விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், செக்கான் கோவில்பட்டி, கீழபெருமாள், அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனுார், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசம் ரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, உடன் காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி.
உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபால மேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுபட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர்.
அலங்காநல்லுார், சர்க்கரை ஆலை, டி.மேட்டுப் பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத் தாடி, பிள்ளையார் நத்தம், மீனாட்சிபுரம், இடை யபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழச்சின்னணம்பட்டி.
நாட்டார் மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















