Madurai Power Shutdown: மதுரை மக்களே அலெர்ட்... நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
Madurai Power Shutdown: 07.12.2024 மதுரை திருமங்கலம் பகுதிக்கு கீழ் உள்ள பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.

