மதுரையில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய 5 பெண்கள் கைது
உசிலம்பட்டியில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள், ஒரே நாளில் இரு வேறு இடங்களில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டியில் ஒரே நாளில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டு, 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம், மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம் மரணம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி தந்து வருகிறார்.
தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்:
வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில், உசிலம்பட்டியில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 5 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டதில் பரப்பை ஏற்படுத்துள்ளது.
மதுரையில் கஞ்சா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் மதுரை மாவட்ட எஸ்.பி., அரவிந்த்-ன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இந்த பதுக்கல் தொடர்பாக அயோத்திபட்டியைச் சேர்ந்த ராஜாக்கொடி, மதுரையைச் சேர்ந்த அமுதா என்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் 5120 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து சேடபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்., சேடபட்டி காவல் நிலைய போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
- Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
இதே போன்று உசிலம்பட்டி அருகே வடுகபட்டி சுடுகாடு அருகே கஞ்சா பறிமாற்றம் செய்ய உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா பறிமாற்றம் செய்து கொண்டிருந்த வடுகபட்டியைச் சேர்ந்த வளர்கொடி, மதுரையைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்ற மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டு, 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம், உசிலம்பட்டியில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் கஞ்சா பதுக்கல் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
மேலும் செய்திகள் படிக்க - வானில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... முதல் முறை விமானத்தில் பயணம் - மதுரையில் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சி சம்பவம்