மேலும் அறிய
Advertisement
வானில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... முதல் முறை விமானத்தில் பயணம் - மதுரையில் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னையை சுற்றிப் பார்ப்பதற்கும் மதுரை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விமானத்தில் சென்னை பயணம்.
வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் ரோட்டரி கிளப் சார்பாக மதுரை அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாணவர்களை மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் விமானத்தில் செல்லும் மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் வானில் பறந்தனர்
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மதுரை இணைந்து மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வகுப்புகளில் பயிலும் 10 மாணவ, மாணவிகள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சென்னையில் தமிழக நிர்வாகம் குறித்து தெரிந்துகொள்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னையில் முக்கிய இடங்களையும் சுற்றி பார்த்து மீண்டும் மதுரை திரும்புகின்றனர். முதல் முறையாக விமானத்தில் செல்லும் மாணவர்களை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன். வசந்த், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் பூ கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
மறக்க முடியாத அனுபவம்
மேலும் இது குறித்து பேசிய மாணவர்கள் கூறுகையில், முதன்முறையாக சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை காண்பதற்கு விமானத்தில் நண்பர்களுடன் பயணம் செய்வது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாக இருப்பதாகவும், இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு எனவும் மகிழ்ச்சியுடன்” தெரிவித்தனர்.
விமானத்தில் பறப்பது கனவு
இதை தொடர்ந்து பேசிய ரோட்டரி கிளப் நிர்வாகி...,” குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருக்கும் விமானத்தில் செல்வது என்பது ஒரு கனவாக இருக்கும். அதனை நிறைவேற்றும் விதமாக மாநகராட்சி பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்கின்றோம். இதன் மூலம் அவர்கள் வாழ்வில் இது போன்ற மாணவர்களை அழைத்து செல்வதற்கு ஒரு முன்னெடுப்பு நிகழ்வாக அமையும் என தெரிவித்தார்.
“எங்கள் குழந்தைகள் விமானத்தில் பறந்து செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பயம், இருந்தாலும் பள்ளி மூலம் செல்வதால் நிம்மதியுடன் அனுப்பி வைத்தோம். எங்களுக்கு கிடைக்காத அனுபவங்கள், எங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பது பாக்கியம்” என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கள்ளச்சாராயத்திலுள்ள மெத்தனாலை 100-மி.லி பருகினாலே உயிருக்கு ஆபத்து தான் - டாக்டர் சரவணன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Surya: கள்ளச்சாராய மரணம்! விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion