Madurai Okha Train: மதுரை - ஓஹா ரயில் சேவை நீடிப்பு; திருக்குறள் எக்ஸ்பிரஸ் புறப்படுவதில் தாமதம்
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை - ஓஹா ரயில் சேவை நீடிப்பு
குஜராத் மாநில தலைநகர் அஹமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை - ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஓஹாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் முற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்து சேரும் ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 01.15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு ஓஹா சென்று சேரும் மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயில் (09519) ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல் திருக்குறள் எக்ஸ்பிரஸ் தாமதம்
இணை ரயில் தாமதமாக வருவதால் கன்னியாகுமரியில் இருந்து புதன்கிழமை (ஜனவரி 3) இரவு 07.10 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி ஹஸ்ரத் நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), 80 நிமிடங்கள் காலதாமதமாக இரவு 08.30 மணிக்கு புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!