மேலும் அறிய

சுற்றுலா பயணிகள் ரயிலில் சமையல் அடுப்பு, அடுப்புக் கரி பறிமுதல்; தனியார் சுற்றுலா மேலாளர் கைது

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகள் யாராவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை உடனடியாக ரயில்வே உதவி எண் 139 -க்கு தெரிவிக்கவும்

தடை செய்யப்பட்ட பொருட்கள்

மதுரை - புனலூர் ரயிலில் இருந்த தனியார் சுற்றுலா ரயில் பெட்டியில், சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய்,  பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது 1989 ஆண்டு ரயில்வே சட்டப்  பிரிவுகள் 67, 164 மற்றும் 165 -ன் படி தண்டிக்கப்படுவார்கள்.
 
அடுப்புக்கரி கண்டுபிடிப்பு

இவற்றையும் மீறி மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு பயன்படுத்த அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இவை கடந்த புதன்கிழமை (மே 29) அதிகாலை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த்தும் (64) கைது செய்யப்பட்டார். வடக்கில் இருந்து வந்த இந்த சுற்றுலா ரயில் பெட்டியில் 59 பயணிகள் பயணித்தனர். மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலின் போது தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு சுற்றுலா ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்திய திருநெல்வேலி வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த், சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்.
 
நடவடிக்கைகள்

சட்டபூர்வ மேல் நடவடிக்கைக்காக தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்தை திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.  சுற்றுலா ரயில் பெட்டிகள் பதிவு செய்யும் போதே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கப்படுகிறது. இதையும் மீறி எதிர்வரும் அபாயத்தை உணராமல் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இது மாதிரியான சட்ட விரோத செயல்களில் சுற்றுலா நிறுவனம் ஈடுபடுகிறது. இவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, அபராதம், ஏற்பட்ட சேத மதிப்பு ஆகியவை விதிக்கப்படுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில் நிலையங்களில் பதாகைகள் அமைப்பது, அடிக்கடி பொது அறிவிப்புகள் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகள் யாராவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை உடனடியாக ரயில்வே உதவி எண் 139 -க்கு தெரிவிக்கவும். தீ விபத்துகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகளும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படுகின்றன என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Embed widget