Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் புதிய சேடக் 35 சீரிஸ் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Bajaj Chetak: பஜாஜ் நிறுவனத்தின் புதிய சேடக் 35 சீரிஸ் ஸ்கூட்டர், ஓலா மற்றும் ஏதர் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியளிக்கும் என கூறப்படுகிறது.
பஜாஜ் சேடக் 35 சீரிஸ் ஸ்கூட்டர்:
பஜாஜ் தனது புதிய சேடக் 35 சீரிஸ் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இதன் மிட் வேரியண்டின் விலை ரூ.1.2 லட்சம் மற்றும் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.1.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சேடக் அதன் 35 சீரிஸில் அதிக சேமிப்பு இடத்துடன் பல மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக பேட்டரியின் இடமாற்றத்துடன் கூடிய பெரிய 35 லிட்டர் பூட் திறன் உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kW நிரந்தர காந்த மோட்டார் உள்ளது. இதன் மூலம் வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும்.
பேட்டரி மற்றும் பிற அம்சங்கள்:
புதிய சேடக்கில் இடம்பெற்றுள்ள 3.5kWh பேட்டரி பேக், இப்போது முன்பை விட இலகுவாக உள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 153 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 950W சார்ஜருடன், பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணிநேரம் ஆகும்.
வடிவமைப்பு விவரங்கள்:
புதிய வாகனத்தில் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்-லேம்ப் மற்றும் புதிய டர்ன் இண்டிகேட்டர் போன்ற மாற்றங்கள் இருந்தாலும், தோற்றம் பழைய வாகனத்தின்படி மிகவும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இருக்கை நீளமானது மற்றும் 80 மிமீ நீளமான வீல்பேஸ் காரணமாக இது மிகவும் விசாலமான தரைப் பலகையைக் கொண்டுள்ளது. புதிய அம்சங்களைப் பொறுத்தவரை, டாப்-எண்ட் 3501 டிரிமில் உள்ள பஜாஜ் சேடக் 35 சீரிஸ் ஜியோ ஃபென்சிங், ஒருங்கிணைந்த வரைபடங்கள், இசைக் கட்டுப்பாடு மற்றும் பலவற்றைக் கொண்ட புதிய தொடுதிரை TFTயைப் பெறுகிறது. அதிக வேகம் குறித்த எச்சரிக்கையும் உள்ளது.
சந்தை போட்டி
புதிய தலைமுறை சேடக் மூலம், விஷயங்கள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது இப்போது ஏதர் மற்றும் ஓலா நிறுவனங்களிடமிருந்து அதன் போட்டியாளர்களை எதிர்கொள்ள அதிக வசதிகள் நிறைந்த ஸ்கூட்டராக மாற்றம் கண்டுள்ளது. இது அனைத்து தரப்பினரையும் ஈர்கக் கூடிய வகையில் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக உள்ளது. மேலும் இந்த கடுமையான போட்டியுள்ள மின்சார ஸ்கூட்டர் பிரிவில், அதன் விற்பனையை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சேடக் EVகள் விற்பனையாகியுள்ளன. அதன் போட்டியாளர்களை விட விற்பனை அதிகரித்துள்ளது.