Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார்.
Wrestler Rey Mysterio: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியரின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்:
புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். இவருக்கு தற்போது வயது 66 ஆகும். அதேநேரம், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை. இவர், WWE போட்டிகளில் மிகவும் பிரபலமான, முகமூடி அணிந்து 619 என குறிப்பிடப்படும் ரே மிஸ்டீரியோ ஜூனியரின் மாமா ஆவார்.
உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் வல்லமை கொண்டவர். களத்தில் அவரது செயல்பாடுகள் எதிராளிகளையே மிரட்சியடைய செய்யும். குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ட்ரேட்மார்க் ஷாட், மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரே மிஸ்டீரியோவின் மல்யுத்த பயணம்
மிஸ்டீரியோ Sr மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்றார். உலக மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA போன்ற முக்கிய உலகளாவிய அமைப்புகளின் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றார். இது பெரும்பாலும் மெக்ஸிகோவின் WWE க்கு சமமானதாக கருதப்படுகிறது. வர்த்தக மல்யுத்த போட்டிகள் மூலம், மிஸ்டீரியோவிற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். முகமூடியை அணிந்தபடி அவர் சண்டையிடுவது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பலருக்கு ரோல் மாடலாகவும் மாறினார்.
Lamentamos el sensible fallecimiento de Miguel Ángel López Días, conocido como Rey Mysterio Sr.
— Lucha Libre AAA Worldwide (@luchalibreaaa) December 20, 2024
Enviamos nuestro más sincero pésame a sus seres queridos y elevamos nuestras oraciones al cielo por su eterno descanso. pic.twitter.com/xnvqSndotS
1990 இல் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ஸ்டார்கேட் போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். கயிற்றின் மீது ஏறி உயரமாக பறந்து எதிராளிகள் மீது குதிக்கும் அவரது பாணி மற்றும் மல்யுத்தத்திற்கான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட அவர், உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். மெக்சிகன் மல்யுத்தத்தை இன்று உலகமே அறிந்திருப்பதில், மிஸ்டீரியோவிற்கு பெரும் பங்கு உண்டு. அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் பல சாம்பியன் பட்டங்களை வென்ற அவர், மல்யுத்த பயிற்சியாளராக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதில் கொன்னன், சைகோசிஸ், தி வார்லார்ட், அவரது மகன் எல் ஹிஜோ டி ரே மிஸ்டீரியோ மற்றும் அவரது மருமகன் ரே மிஸ்டீரியோ ஆகியோர் அடங்குவர். ஆனாலும், ரே மிஸ்டீரியோ சீனியரை போன்று எந்த மெக்சிகன் வீரரும் பிரபலமாகவில்லை.