மேலும் அறிய
Advertisement
பல லட்சம் மதிப்பிலான பம்பு செட் மோட்டார் காப்பர் வயர்கள் தொடர் திருட்டு - மதுரையில் விவசாயிகள் கவலை
விவசாய குறைதீர் கூட்டத்தில் பேசியும் கூட இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரை மேலூர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான 150க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட் மோட்டார் காப்பர் வயர்கள் தொடர் திருட்டு - விவசாயிகள் கவலை - காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
பம்பு செட் மோட்டர் திருட்டு
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய மோட்டார் பம்பு செட் மற்றும் பஞ்சாயத்து போர்டு குடிநீர் போர்வெல் மோட்டார்களில் மின்சாரம் செல்வதற்காக இணைக்கப்படும் காப்பர் வயர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக புகார்கள் எழுந்துவருகிறது. இது போன்ற ஒவ்வொரு மோட்டார்களிலும் இணைக்கப்படும் 6ஆயிரம் முதல் 10ஆயிரம்வரை மதிப்பிலான 30 மீட்டர் முதல் 50 மீட்டர் வரையிலான காப்பர்வயர்கள் மர்ம்நபர்களால் தொடர்ந்து திருடப்பட்டுவருதாகவும் தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் , கேசம்பட்டி, பட்டூர், கருங்காலக்குடி வஞ்சிநகரம் , சேக்கிபட்டி, கச்சிராயன்பட்டி, சுக்காம்பட்டி சொக்கலிங்கபுரம், அய்யாப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர், கீழவளவு, கீழையூர், பூஞ்சுத்தி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நூற்றுக்கு மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டில் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும், இது உரிய விசாரணை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகி பழனிச்சாமி...,”மேலூர் பகுதியில் விவசாய இடங்களில் திருடு போன பம்புசெட் காப்பர்வயர்களை மீண்டும் வாங்குவதற்கு பணம் இல்லாமல் வயர்கள் வாங்க முடியாத நிலையில் விவசாயத்திற்கான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வரும் சூழலில் இதுபோன்று தொடர்ச்சியாக 150 க்கு மேற்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்பு செட் காப்பர் வயர்களை திருடக்கூடிய நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ச்சியாக இது குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் பேசியும் கூட இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் 10ஆயிரம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வாட்டி வதைக்கும் வெயில்.. களைப்புடன் வரும் பயணிகளுக்கு மண் பானையின் இயற்கை குளிர் குடிநீர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion