Madurai: பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றுவதாக பேச்சிகுளம் ஊராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
ஊராட்சி நிர்வாகம் பூங்கா அமையும் இடத்தில் குப்பை கொட்டுவதால், அதனை மற்ற நபர்களும் குப்பை கொட்டும் இடமாக மாற்றுவதாக தெரிவித்தனர்.
”இனி அங்கு குப்பைகள் கொட்டமாட்டோம். அதே போல் மற்ற நபர்கள் குப்பை கொட்டினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிகுளம் கிராம ஊராட்சியில் சோனா மகால் எதிரே பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தினர் சமீபகாலமாக குப்பைகளை மலை போல கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிகுளம் கிராம ஊராட்சியில் சோனா மகால் எதிரே பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தினர் சமீபகாலமாக குப்பைகளை மலை போல கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.#madurai @LPRABHAKARANPR3#abpnadu pic.twitter.com/aDGNtYab6i
— arunchinna (@arunreporter92) December 9, 2023
இந்த இடத்தின் அருகே அரசு ஆரம்ப பள்ளியும், பல்வேறு குடியிருப்பு பகுதியும் நிறைந்து காணப்படும் சூழலில் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாய நிலை உருவாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் பூங்கா அமைக்கவும், குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வரும் ஊரட்சி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஊராட்சி சார்பாக குப்பை கொட்டுவதால் வேறு சில நபர்களும் அந்த இடத்தை குப்பை மைதானமாக நினைத்து குப்பைகளை கொட்டி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்த பிரச்னை தொடர்பாக மேற்கு ஒன்றிய பி.டி.ஓ., உலகநாதனிடம் பேசினோம், “பேச்சிகுளம் கிராம ஊராட்சியில் குப்பை கோட்டுவது தொடர்பாக ஊராட்சி மன்ற கவனத்திற்கு எடுத்து வைத்துள்ளேன். குப்பைகள் தற்காலிகமாக கொட்டப்பட்டுள்ளது. இனி அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படும்” என்றார்.
- மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
மேலூர் பேச்சிகுளம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நம்மிடம் சக்திவேல் பேசினார்,”பேச்சிகுளம் பூங்கா வரும் இடத்தில் குப்பை கொட்டுவது தவறுதான். ஆனால் குப்பை வண்டி மழை காலத்தில் பதிந்து கொண்டதால் அங்கு கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இனி அங்கு குப்பைகள் கொட்டமாட்டோம். அதே போல் மற்ற நபர்கள் குப்பை கொட்டினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS: மிக்ஜாம் புயல் தாக்கம்; மக்கள் பாதிப்பிற்கு தி.மு.க. அரசுதான் முழு பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Jayakumar: தைரியம் இருக்கா? முத்து படம் ஓடுவதற்காக அம்மாவைப் பற்றி பேசுவதா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்