மேலும் அறிய

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்

மதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஏ.வி.மேம்பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட மதுரை ஏ.வி.மேம்பாலம், வெள்ள பெருக்கையும், இயற்கை சீற்றங்களையும் கடந்து 138-வது ஆண்டுகளாக அதே கம்பீரத்தை தாங்கி நிற்கிறது. முல்லை பெரியாறு அணையை போல பலராலும் போற்றப்படும் ஏ.வி பாலம் மதுரையின் மிக முக்கியமான அடையாளம். மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், முழுவதுமே வெள்ளப்பெருக்கு காணப்படும். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து பாயும். ஆற்றங்கரைகளில் மதுரை சித்திரை  திருவிழா கோவிந்தா... கோவிந்தா... சத்தத்துடன் களைகட்டும். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாத காலத்தில் மதுரையின் வட பகுதியில் இருந்து தென்பகுதிக்குச் செல்ல முடியாமல் இரு பகுதி மக்களும் தனித்தீவில் இருப்பது போல் தவித்தனர். மதுரை மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு ஏற்படும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் ஏ.வி.மேம்பாலத்தை கட்டினர். இந்த பாலம், கட்டி இன்று டிசம்பர் 8-ம் தேதியுடன் 137 ஆண்டுகளை நிறைவு பெற்று 138 ஆண்டை தொடங்குகிறது.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
நூற்றாண்டு கடந்த ஏராளமான வெள்ள பெருக்கையும், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி தற்போது வரை கம்பீரம் குறையாமல் காணப்படும் இந்த ஏ.வி.மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் இன்று ஏ.வி.மேம்பாலத்தின் 138-வது கொண்டாட்டம் மற்றும் அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விழா எடுத்தனர். இதில் சமூக ஆர்வலர் இல.அமுதன், ஆழ்வார் ராஜா, அபுபக்கர் நீர் நிலைகள் பாதுகாப்பு நிறுவனர், சுற்றம் நட்பும் ஆசிரியர் இராமசுப்ரமணியன் ,பார்த்த சாரதி, மணிகன்டன்,கார்மேகம், திருகண்ணன், எம்மால் இயன்று, மணி, பழனிவேல் ராஜன், ஆறுமுகம்,திருநாவுக்கரசு,விக்னேஷ் வி.கே.ஜி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் நம்மிடம்...,” ஏ.வி பாலம், கட்டுவதற்கு அப்போது ரூ.2.85 லட்சம் மட்டுமே செலவாகியுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை வாகனங்களின் எடையையும், அதன் வேகத்திற்கும் ஈடுகொடுத்து இந்த பழம்பெரும் பாலம் வலுவாக இருக்கும். இந்த ஏ.வி. மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்று வரை சான்றாக உள்ளது. மதுரையில் அதற்கு பிறகு கட்டிய பாலம் இடிக்கப்பட்டு சமீபத்தில் புதிய பாலம் கட்டிய வரலாறும் நடந்துள்ளது. ஆனால், இந்த பாலம் மட்டும் தற்போது வரை உயிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. மதுரை மக்களின் நெஞ்சங்களில் குடிக் கொண்டுள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த ஏ.வி.மேம்பாலம்பிறந்த நாள் கொண்டாடுவது அவசியமானது. தற்போது பாலத்தின் அடிப்பகுதிகள், கைப்பிடி சுவர்கள் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து கொண்டிருக்கிறது.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
பாலத்தின் அடிப்பகுதி கான்கிரீட் உதிர்கிறது. பாலத்தின் அடிப்பகுதியில் பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்லும் சில வட்ட வடிவத் தூண்களின் அடித்தளமும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அடியில் உள்ள கருங்கல்கள் தண்ணீர் செல்வதால் பெயர்ந்து கொண்டிருக்கிறது. பாலத்தின் அஸ்திவாரத்தை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னம் என்று அறிவிப்பதை போல் ஏ.வி. மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget