மேலும் அறிய
Advertisement
மின்சாரம் தாக்கி மகனின் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெற்றோர்; மதுரையில் சோகம்
கனமழை காரணமாக மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழப்பு - மகனின் கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த பெற்றோர்.
மதுரையில் கனமழை
மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை மாநகர் டி.வி.எஸ்., நகர் துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்த முருகேசன் (50), மனைவி பாப்பாத்தி (44) தம்பதியினர் பலசரக் கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளனர். தனது மகன் முன்னே சைக்கிளில் சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்து பெற்றோர் பைக்கில் சென்றுள்ளனர்.
மகன் கண்முன் துடிதுடித்து பெற்றோர்
இந்நிலையில் அவர்கள் சென்ற பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்த காரணமாக மின்சாரம் வயர் அறுந்து தொங்கியபடி இருந்துள்ளது. முன்னால் சைக்கிளில் சென்ற மகன் மின்கம்பி அறுந்து தொங்கியதை பார்த்து அது குறித்து பெற்றோரிடம் கூறுவதற்காக கொஞ்சம் தூரம்சென்று திரும்பி பார்த்த நொடியில் மின்கம்பியை கவனிக்காத பெற்றோர் பைக்கில் வந்தபோது கணவன் மனைவி இருவர் மீது மின்சார வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்முன்பாக பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் சென்றபோது இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறப்பு கவனம் தேவை
மதுரையில் பெய்த மழை காரணமாக மின்சார கம்பி்அறுந்து விழுந்ததில் மின்சாரம்தாக்கி மகன் கண் முன்பாகவே பெற்றோர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை என பலமுறை புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்தப் பகுதி முழுவதிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மின்சார வயர் அருந்து விழுந்தது தெரியாமல் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுபோன்ற கோடைகாலங்களில் பெய்ய கூடிய கனமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பி வயர்களை ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பி அறுந்துவிழுவது தொடர்பான புகார்களை அளிப்பதற்கான சிறப்பு புகார் எண்களை அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்! உற்சாக வரவேற்பு தந்த ஆம் ஆத்மி தொண்டர்கள்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion