மேலும் அறிய
Advertisement
எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் - மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
திமுக காங்கிரசின் கைக்கூலி எடப்பாடி அதிமுகவில் இருந்து வெளியேறு - கழக உடன்பிறப்புகள் ஒன்றிணைய வேண்டும் மதுரையில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
மதுரை மாவட்ட பகுதியில் எடப்பாடி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பீ.பி.குளம் நாராயணபுரம், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., மதுரை மாநகர் மாவட்ட வடக்கு தொகுதி 2ஆம் பகுதி நிர்வாகிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.
"தி.மு.க - காங் கைக்கூலி துரோகி எடப்பாடி கழகத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனவும் கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் வகுத்த சட்ட விதியை காற்றில் பறக்க விட்டு நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா வகித்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் எடப்பாடி வெளியேறு” என மதுரையில் போஸ்டர் .......! pic.twitter.com/YTaJnMr5V2
— arunchinna (@arunreporter92) March 9, 2023
இந்த போஸ்டர்களில் தி.மு.க., காங்கிரஸ் கைக்கூலி துரோகி எடப்பாடி பழனிச்சாமி கழகத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனவும் கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் வகுத்த சட்ட விதியை காற்றில் பறக்க விட்டு நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா வகித்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் எடப்பாடி கழகத்தை விட்டு வெளியேறு என்ற வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் அண்ணா , எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தெடுக்கப்பட்ட செல்லுமென உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் மதுரை மாவட்ட பகுதியில் எடப்பாடி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Aavin: ஆவின் பால் விநியோகம் தாமதம் - பால்பண்ணையை முற்றுகையிட்ட டெப்போ முகவர்கள்
மேலும் செய்திகள் படிக்க - ABP NADU Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி - கல்பனா சாவ்லா விருது பெற்றவருக்கு பணி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion