மேலும் அறிய
Advertisement
மதுரையில் 7 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இன்றி தவித்த மக்கள் - காரணம் என்ன?
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தால் 7 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர் தவித்தனர்.
பாதுகாப்பற்ற முறையில் பணிகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
இரும்பு சாரம் சரிந்து விபத்து
மதுரை மாநகர் நேரு நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் 6 மாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேரு நகர் திருவள்ளுவர் தெரு பகுதியின் பிரதான சாலையோரத்தில் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலேயே கட்டப்பட்டுவந்த நிலையில் திடீரென கட்டிட பணிகளுக்காக அமைக்கப்பட்ட 42 அடி இரும்பு சாரமானது திடீரென சரிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது. இரும்பு சாரம் சரிந்த விபத்தில் இரும்பு சாரம் முழுவதும் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களின் மீது சரிந்து விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் உடைந்து நொறுங்கியதோடு, மின்கம்பிகள் முழுவதுமாக சேதமடைந்து அறுந்து தொங்கியது. நல்வாய்ப்பாக அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டபோது ஆட்கள் மற்றும் வாகனம் நடமாட்டம் இல்லாத நிலையில் பொதுமக்கள் பாதிப்பின்றி தப்பினர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்த விபத்து காரணமாக கடந்த 7 மணி நேரமாக நேருநகர், திருவள்ளுவர் தெரு, மாடக்குளம், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை அமைத்து மின் கம்பிகளை இணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மதுரை நேருநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தால் 7 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர் தவித்தனர். மேலும் நேருநகர் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் 42 அடி உயர இரும்பு சாரம் உடைந்து விழுந்த விபத்தால் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்து நடைபெற்ற சாலை பகுதிக்கு வந்து திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற முறையில் பணிகளை மேற்கொண்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற அடுக்குமாடி குடியிருப்பு பணிகளுக்கு உரிய அனுமதி உள்ளதா? பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அதுவரை அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கம்பீர் தான்; அடித்துச் சொல்லும் பிசிசிஐ வட்டாரங்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN TRB Exam: பட்டதாரி ஆசிரியர் தேர்வில் எல்லா பாடங்களிலும் தவறான கேள்விகள்: மறுதேர்வு நடத்தக் கோரிக்கை!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion