மேலும் அறிய
Advertisement
மதுரையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் சேதம் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
”சாமி சிலைகள் குதிரைகள் அதே இடத்தில் நிறுவப்பட்டு பாலாலயம் செய்து கிராம மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்” - என கோரிக்கைவிடுத்தனர்.
மதுரை மேலூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் சேதம் சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளரிப்பட்டி கிராமத்தில் முனுகால் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கிராமக் கோவில்களில் 30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் மற்றும் குதிரைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதன் கூறுகையில், “கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக ரூ.30 லட்சம் செலவில் கோவில் சிலைகள் குதிரைகள் எடுத்து வைத்து திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்நிலையில் சமூக விரோதிகள் சிலரின் தூண்டுதலால் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சாமி சிலைகள் மற்றும் குதிரைகளை சேதப்படுத்தி உள்ளனர். எனவே மீண்டும் சாமி சிலைகள் குதிரைகள் அதே இடத்தில் நிறுவப்பட்டு பாலாலயம் செய்து கிராம மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் மேலும் சாமி சிலைகளை சேதப்படுத்திய சமூக விரோதிகள் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch Video: ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் கையின்றி பேட்டிங், பந்துவீசிய அமீர் ஹூசைன்.. கௌரவித்த சச்சின் டெண்டுல்கர்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion