மேலும் அறிய
Advertisement
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு.
தேர்தல் திருவிழா 2024
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார்? என்பதை இந்த தேர்தல் தீர்மானித்துவிடும். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் சீரமைக்கப்பட்டது.
மதுரையில் பரபரப்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை முழுவதிலும் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை அவர்களது முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென நேற்று மாலை முதல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்ட நிலையில் மழை பெய்த நிலையில் சிசிடிவி கேமராக்களுக்கு செல்லக்கூடிய வயர்களில் சிறிது பழுதை ஏற்பட்ட நிலையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கம்
இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின் சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனிடையே சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதை அறிந்த பல்வேறு கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் வேலை செய்வதை உறுதி செய்த பின்பாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இனி இது போன்று சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் முழுமையாக கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்து விட்டு சென்றனர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion