மதுரையில் 1050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் நாகேந்திர குமார் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை முத்துப்பட்டி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1050 கிலோ ரேசன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் இரண்டு நபர்கள் கைது.
ரேஷன் பொருட்கள்
தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல்
இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, சென்னை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஜோஷி அவர்கள் உத்தரவுப்படியும், மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் அவர்கள் மற்றும் மதுரை சரக டி.எஸ்.பி., ஜெகதீசன், அவர்கள் உத்தரவுப்படி மதுரை உணவு கடத்தல் பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் முத்து ராஜா போலீசார் தலைமையில் மதுரை முத்துப்பட்டி கணமாய்கரை பகுதியில் சோதனை செய்த போது 1050 கிலோ ரேஷன் அரிசி வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசி வாகனத்தில் கடத்திய மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் நாகேந்திர குமார் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க - அயன் பட பாணியில் துபாயிலிருந்து 1 கிலோ தங்கம் மலக்குடலில் கடத்தி வந்த நபர் கைது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” - ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!