மேலும் அறிய
Advertisement
"அமைச்சரிடம் இருந்து மதுரை மேயருக்கு விடுதலை வேண்டும்” : செல்லூர் ராஜூ காட்டம்..
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால்தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
மதுரை பரவையில் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார் .
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதே? என்ற கேள்விக்கு.
தமிழக முதல்வர் தற்போதைய நிலை குறித்து கவனமாக கையாள வேண்டும். தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விழா காலங்களில் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு அனைத்து தரப்பினருடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl மதுரையில் பேட்டி !@ADMKMadurai | @HelloMadurai | @dhiviya_Barathi | @gaya3_tweets | pic.twitter.com/ixSt1STTiw
— arunchinna (@arunreporter92) October 2, 2022
ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. அமைச்சர்கள், மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர். அமைச்சர்கள் செல்லும் கார் ஓசி, பணியாட்கள் ஓசி, வீடு ஓசி, என அனைத்தும் ஓசி, மக்கள் வரி பணத்தில் தான் அமைச்சர்களுக்கு எல்லாம் ஓசி. ஆனால் ஒரு அமைச்சர், பெண்களை பார்த்து ஓசி பயணம் என.வாய் கொழுப்பாக பேசுகிறார். எனவே தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என கூறாமல், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் என பெயரிட்டு அழைத்தார்.
எனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று உள்ளதை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., ஆட்சியில் யானை பாகன் போல் செயல் பட்டார். ஆனால் தற்போது, குதிரை ஓட்டியாக பயன்படுத்து கின்றனர். நல்ல மனிதாபிமானம் மிக்க IAS அதிகாரிகளை, நல்ல வகையில் பயண்படுத்த வேண்டும். தற்போது ரேசன் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளது. இந்த விஷயத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டு உள்ளது.
போதை பொருள் விற்பனை கடத்தல், அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை முதல்வர் சர்வாதிகாரியாக மாறவில்லை? மதுரை மாநாகராட்சி மேயரை முதலில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அமைச்சர் பி.டி.ஆர், சொல்வதை தான் செய்ய வேண்டும் என செயல்படுகிறார். முதலில் மதுரை மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இவ்வாறு, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேட்டி அளித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Premalatha : "ஓசியில் பயணம் வேண்டாம்..! ஒட்டுமொத்த பெண்களும் புறக்கணியுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion