மேலும் அறிய
Advertisement
Premalatha : "ஓசியில் பயணம் வேண்டாம்..! ஒட்டுமொத்த பெண்களும் புறக்கணியுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்...!
மத்திய அரசு கூறியதைப் போல மதுரை எய்ம்ஸ் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக வந்த தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
பேருந்தில் ஓசியில் பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்https://t.co/wupaoCQKa2 | #tngovt #DMDK #Vijaykanth #premalathavijayakanth #tamilnadu pic.twitter.com/Czm3dsxMXx
— ABP Nadu (@abpnadu) October 2, 2022
ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு
ஆம்னி பேருந்து முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில்தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லலாம். ஏழை மக்கள் அரசு பேருந்து பயணிக்கலாம் என அமைச்சர் சொல்கிறார், இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு 4000 ரூபாய் என்றால் அதன் பிறகு ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். எல்லாமே வியாபாரம் என்றால் இந்த அரசும் வியாபார ரீதியாக நடக்கிறதா? இது மக்களுக்கான அரசா? இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இது கண்டனத்திற்குரியது.
அரசு பேருந்து தரமாக வைத்தால் மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பார்கள். அப்படி இல்லை என்றால் ஆம்னி பேருந்து போல் இருக்கும் அரசு பேருந்துகள் வண்டியை காலங்களில் கம்மியாக இருந்தால் மக்கள் பயணிப்பார்கள்.
பெட்ரோல் குண்டு வீசி கலாச்சாரம் குறித்த கேள்விக்கு:
பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் கண்டிக்க கூடிய ஒரு விஷயம். முதல்வர் சட்ட ஒழுங்கை கையில் வைத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் முதல்வர் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பேரணிகளுக்கு அனுமதி ரத்து செய்வது குறித்த கேள்வி:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருபுறம் விசிக கட்சி ஒருபுறம் அனுமதி கேட்கிறார்கள். அதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக சொல்கிறார்கள் சட்டத்திற்கு நம் தலைவணங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்காக அரசு இந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை வரவேற்க வேண்டும்.
பெண்கள் இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி கருத்து குறித்த கேள்வி
இதை அதிமுகவினர் வேண்டுமென்று செய்ததாக ஒரு புறம் கருத்து பரவி வருகிறது. ஆனால் இது உண்மையானால் நல்லது. ஒரு அமைச்சர் ஓசியில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்கிறார் மற்றொருவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பதற்கு இப்போதுதான் சில்லறை மாற்றுகிறோம் என்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு வெற்றிக்கு பின் ஒரு நிலைப்பாடு. ஓசியில் பயணம் வேண்டாமென்று அந்தப் பெண் சொன்னது போல ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அப்படி புறக்கணித்தால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அமைச்சர் சொந்த செலவில் போக்குவரத்து துறை ஓடவில்லை மக்களின் வரிப்பணத்தில் ஓடுகிறது. இப்போது இது போன்ற கருத்துக்கள் கண்டனத்திற்குரியது.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜேபி நட்டா கருத்து குறித்த கேள்விக்கு
உதயநிதி ஸ்டாலின் தேர்தலின் போது செங்கலை காட்டி அரசியல் செய்தார் பின்பு என்ன செய்தார்கள், ஆனால் ஜேபி நட்டாவிடமும் கேட்கிறோம். அறிவிப்பிற்கு பிறகு இதுவரை அவர்கள் என்ன செய்துள்ளார்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் தேவை, மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக உள்ளது, சொன்னதைப் போல் மதுரை எய்ம்ஸ் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion