காவல்துறை வாகனத்தில் ஏறியபோது காலரை தூக்கிவிட்டு கெத்தாக சென்ற தனிப்படை காவலர்கள்.
தனிப்படை காவலர்களால் நீதிமன்றத்தில் ஆஜர்
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணைக்கு எடுப்பதற்கான மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள் 16ஆவது நாளாக விசாரணை
ஜூன் 28ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்றது. விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாகிய, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 16ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணை
இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணை நடைபெறுகிறது. இது, மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு
இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி முன்பாக 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 பேருக்கும் ஆகஸ்ட் -13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
கெத்தா சென்ற காவலர்கள்
இதனையடுத்து 5 காவலர்களும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது இருவர் தனிப்படை காவல்துறையினரிடம் பேசிக்கொண்டே இருந்தனர். அப்போது வாகனத்தில் ஏறிய தனிப்படை காவலர்கள் சிலர் தனது காலரை தூக்கிவிட்டு கெத்தாக வாகனத்தில் ஏறி சென்றனர்.
அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்குப் பின் நிகிதா
நேற்று ஆறு மணி நேரம் விசாரணை முடிவடைந்து புறப்பட்ட பேராசிரியர் நிகிதா பேசும் போது...,” சி.பி.ஐ.,யிடம் உண்மையை சொல்லி உள்ளேன். எங்களை பற்றி யூடியூப்பில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் வெறும் புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது. அஜித்குமார் இறந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். நாள்தோறும் அழுது கொண்டுள்ளேன். சிபிஐயிடம் எல்லாமே சொல்லிவிட்டேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை. வேதனையாக உள்ளது. வேண்டும் என்றே.. சாக வேண்டும் எனவா நினைப்போம். அஜித்குமார் மரணத்தால் நானும் வேதனையில் தான் உள்ளேன். சாப்பிட முடியவில்லை. காய்கறி வாங்க, பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்ல முடியவில்லை. ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது” என நிகிதா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.