மேலும் அறிய

TN Lok Sabha Election Results 2024: தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி மக்கள் இயக்கங்கள் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், நாளை எண்னப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நேர்மறையாக நடத்தி தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி மக்கள் இயக்கங்கள் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
 
மதுரையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
 
மதுரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர், மதுரை மத்திய தொகுதி, தெற்கு, வடக்கு கிழக்கு மேற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உட்பட்ட மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 542 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1573 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 9லட்சத்தி 80ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை முழுவதிலும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரங்களுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வருவதற்கான கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 
 
மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
 
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நேர்மறையாக நடத்தி தேர்தல் ஜனநாயகத்தை காத்திட கோரி, மக்கள் இயக்கங்கள் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ”நாடாளுமன்ற தேர்தலில் நேர்மையான வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தியும், தேர்தல் ஜனநாயகத்தை காத்திட வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தகுதி நீக்கம் செய்ய கோரியும், அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டும்”. உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தினர். அப்போது தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க., அரசு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மக்கள் கண்காணிப்பாக இயக்குநர் ஹென்றி திபேன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score: இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்..  பண்ட் வந்தவுடன் வெளியேற்றம்..!
IND vs SA T20 Final LIVE Score: இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்.. பண்ட் வந்தவுடன் வெளியேற்றம்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score: இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்..  பண்ட் வந்தவுடன் வெளியேற்றம்..!
IND vs SA T20 Final LIVE Score: இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்.. பண்ட் வந்தவுடன் வெளியேற்றம்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக் கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக் கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Embed widget