மேலும் அறிய
பண்டிகை முடிந்து ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்.. ரயில் பயண சீட்டு விற்பனையில் சாதனை படைத்த மதுரை கோட்டம்!
பண்டிகை காலம் முடிந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவில்லாத ரயில் பயண சீட்டுகள் விற்பனையில் ரூபாய் ஒரு கோடி வசூல்.

ரயில்
Source : whatsapp
நெரிசலை சமாளிக்க முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை, மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பினர். அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. மதுரை கோட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனையில் ரூபாய் 1.03 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலி இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் 2000 பயணிகளும் பயணித்தனர்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னை இடையே மெமு சிறப்பு ரயிலும், திருநெல்வேலி - சென்னை இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் விசாலமான இடவசதி கொண்ட தலா 17 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. மதுரையில் இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் 1200 பயணிகளும் திருநெல்வேலி இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் 2000 பயணிகளும் பயணித்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை, மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















