மேலும் அறிய
நெருங்கும் தீபாவளி... மல்லிகை விலை உச்சம்! ரூ.2000-ஐ தொடுமா? வியாபாரிகள் அதிர்ச்சி தகவல்
மதுரை மல்லியின் விலை ரூ.2 ஆயிரத்தைத் தொடும் என வியாபாரிகள் கணிப்பு, மாட்டுத்தாவணி மார்கெட்டில் இன்றை பூக்களின் விலை நிலவரம்.

மல்லிகைப் பூ
மதுரை மல்லிகைப் பூ விற்பனை
மதுரை மல்லிகைப் பூக்களுக்கு எப்போதும் டிமாண்ட் உள்ளது. மதுரைக்கு முதல்முறையாக வரும் பெண்கள் கண்டிப்பாக மல்லிகைப் பூ வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு தகுந்தார் போல் மல்லிகையின் வாசனை தனியாக இருக்கும். சிலுக்குவார்பட்டி, இராமநாதபுரம், கன்னிவாடி, திருமங்கலம், மேலூர் என மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகைப் பூ விளைச்சல் சிறப்பாக இருக்கும். மண் வளத்தால் கிடைக்கும் தனித்துவமான மதுரை மல்லிகை முகூர்த்த நாட்கள் இல்லாத போது கூட விலை அதிகமாக இருக்கும். அதனால் நூறு பூ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் என சில்லரை விற்பனையில் இருக்கும். இந்த சூழலில் தீபாவளி நெருங்கும் சூழலில் பூக்கள் விளை சீராக உயர தொடங்கியுள்ளது.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.700, பிச்சி ரூ.600, முல்லை ரூ.600, செவ்வந்தி ரூ.70, சம்பங்கி ரூ.30, செண்டு மல்லி ரூ.20, கனகாம்பரம் ரூ.400, ரோஸ் ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.180, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.60, தாமரை (ஒன்றுக்கு) ரூ.5 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. ஒன்றரை டன் முதல் 2 டன் வரத்து வந்துள்ளது. தீபாவளியை ஒட்டி மதுரை மல்லியின் விலை ரூ.2 ஆயிரத்தைத் தொடும் என வியாபாரிகள் கணிப்பு தெரிவித்துள்ளதாகவும், மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















