மேலும் அறிய
தெற்கு ரயில்வேக்கு புதிய AGM... யார் இந்த விபின் குமார்? முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் அதிகாரி!
1988 ஆம் ஆண்டு குழுவைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்.இ. (IRSE) அதிகாரி விபின் குமார், தெற்கு ரயில்வே புதிய கூடுதல் பொது மேலாளர் (AGM) பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

விபின் குமார்
Source : whatsapp
தெற்கு ரயில்வேக்கு புதிய கூடுதல் பொது மேலாளர் - யார் இந்த விபின் குமார்?
விபின் குமார் அவர்கள் 1988-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியியல் சேவையில் (IRSE) இணைந்தார். அவரது நீண்ட மற்றும் சிறப்பான பணிக்காலத்தில், தெற்கு மத்திய ரயில்வே, வடக்கு ரயில்வே, தெற்கு மேற்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் வட மத்திய ரயில்வே உள்ளிட்ட பல மண்டலங்களில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் ரயில்வே, மெட்ரோ, நெடுஞ்சாலை மற்றும் சுரங்கம் போன்ற பல துறைகளில் பெரும் அளவிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை வழிநடத்தியுள்ளார். பல துறை திறமைகளை வெளிப்படுத்தியவர்.
விபின் குமார் - மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்
தெற்கு ரயில்வே AGM பொறுப்பை ஏற்கும் முன், விபின் குமார் அவர்கள் வட மத்திய ரயில்வேயின் நிர்வாக அலுவலர் (Chief Administrative Officer/Construction) பதவியில் இருந்தார். அதற்கு முன், கிழக்கு ரயில்வேயின் மூத்த துணை பொது மேலாளர் (SDGM) மற்றும் பெங்களூருவிலுள்ள ரெயில் வீல் தொழிற்சாலையின் (Rail Wheel Factory) முதன்மை தலைமை பொறியாளர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். விபின் குமார் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அலஹாபாத் (Motilal Nehru National Institute of Technology, Allahabad) இலிருந்து பட்டம் பெற்றவர். பின்னர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி (IIT Delhi) யில் கணினி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். விபின் குமார் 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெற்ற கவுஷல் கிஷோர் அவருக்கு அடுத்தப்படியாக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















