மேலும் அறிய
Advertisement
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
அழகிரிய எதிர்த்து அரசியல் செய்தவன் நான். எங்களுக்காக சிறைச்சாலை உருவாக்கப்பட்டது என்று சொன்னவன் நான். - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை கொண்டு வந்து விலையில்லா அரிசியை மக்களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். தற்போது எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்
கருணாநிதி ஆட்சியில் மக்கள் கப்பக்கிழங்கு சாப்பிட்டார்கள்.
மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு செல்லூர் கே.ராஜூ பேசுகையில்..” எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி 10 நாட்கள் கூட தாங்க முடியாது என்று பேசியவர் தான் கருணாநிதி. கலைஞர் எம்.ஜி.ஆரை சாதாரணமாக எடை போட்டு விட்டார். விலையில்லா வேஷ்டி, சத்துணவு திட்டம், மாணவ மாணவிகளுக்கு சீருடை, மாணவ மாணவியர்களுக்கு காலணி என்று பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எம்ஜிஆர். சண்டாலப் பய கருணாநிதி ஆட்சியில் மக்கள் கப்பக்கிழங்கு சாப்பிட்டார்கள். ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை கொண்டு வந்து விலையில்லா அரிசியை மக்களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். தற்போது எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
பதவியில் வரமாட்டேன் என்று பேசினார், உதயநிதி ஸ்டாலின்
நான்கு முறை வெளிநாடு சென்றார் முதலமைச்சர். நான் சவால் விடுகிறேன் என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தீர்கள். அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டீர்களே என்ன நடந்தது? அமெரிக்கா சென்று முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். பிறந்தால் கருணாநிதி மகனாக பிறக்க வேண்டும். எந்த தியாகமும் செய்யாமல் எந்த உழைப்பும் அப்பா முதலமைச்சர் என்பதால் இவரும் முதலமைச்சராகி உள்ளார். நேத்து வரை திரிசா நயன்தாராவை கட்டிப் பிடித்தவர். தற்போது அவர் அமைச்சர். இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் தான் கிடைக்கும். நீங்கள் திமுகவில் பதவிக்கு வருவீர்களா?, அமைச்சர் ஆவீர்களா என்று கேட்டார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் திமுகவில் உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் மூத்தவர்கள் தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்கள் நான் பதவியில் வரமாட்டேன் என்று பேசினார், உதயநிதி ஸ்டாலின். ஆனால், தற்போது அமைச்சராகி உள்ளார். சட்டமன்றத்தில் எனக்கும் ராஜன் செல்லப்பாவுக்கும் கடைசி இருக்கை கொடுத்தார்கள். நாங்கள் பேசினால் கூட கேட்காது. பத்து வருடமாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன் என்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் உள்ளதா. நான் மதுரைக்காரன். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது ஜெயலலிதா சொன்னார் இந்த துறை கடுமையான துறை என்று சொன்னார். அழகிரிய எதிர்த்து அரசியல் செய்தவன் நான். எங்களுக்காக சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. என்று சொன்னவன் நான். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. அரசாங்கம் கஜானா காலி, டாஸ்மாக் மூடப்பட்டது பத்திரபதிவு கிடையாது. அந்த நேரத்திலும் கூட கொரோனா காலகட்டத்தில் நிதி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.
மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, ஏட்டையாவுக்கு பாதுகாப்பு இல்லை, கலெக்டர் உட்பட அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். நேற்று வரைக்கும் நயன்தாராவை பிடித்துக் கொண்டிருந்தவர்க்கு துணை முதல்வர் போஸ்டிங் கொடுக்கிறார்கள். ஸ்டாலின் கருணாநிதிக்கு பின்னால் நின்றவர் அவருக்கு என்ன திறமை இருக்கிறது. அமெரிக்கா சென்று ஜிம்முக்கு போகிறார் சைக்கிள் ஓட்டுகிறார். தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் அமெரிக்கா சென்றார் மு.க.ஸ்டாலின். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: இதயம், சிறுநீரகம், கருவிழி, தோல், கல்லீரல்... 7 பேருக்கு வாழ்வளித்த பெண் சமையல் மாஸ்டர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion