மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சிவகங்கை குழந்தை வழக்கு: குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம்
குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - மதுரைக்கிளை
சிவகங்கை மாவட்ட தம்பதியினரின் குழந்தையை வாரத்தில் 3 நாள் தந்தையிடமும் 3 நாள் தாயிடமும் இருக்கலாம் என குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில்,
குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும், குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் " நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் பவானி என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகி 2020 ஆம் ஆண்டு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் குழந்தையை ஆறு மாதத்தில் இருந்து நானும் எனது பெற்றோர்களுமே வளர்த்து வருகிறோம். இந்நிலையில் எனது மனைவி சிவகங்கை மாவட்டம் குழந்தைகள் நல குழு தலைவரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் குழந்தைகள் நல குழுத்தலைவர் குழந்தையை ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்னிடமும், மூன்று நாட்கள் எனது மனைவியும் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே குழந்தைகள் நலக்குழு தலைவர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் நல குழு தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் 10 மாதங்கள் முழுவதுமாக படித்து முடித்ததற்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.
முதுநிலை கணித ஆசிரியர் பணிக்கான 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிவிப்பில் எம் பி சி இட ஒதுக்கீடு அடிப்படையில் தனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என செண்பகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தேனி மாவட்டத்தில் பணியில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்டது ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மனுதாரர் ஒரே ஆண்டில் பிஎட் மற்றும் எம்எஸ்சி படிப்புகளை படித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு பணி வழங்கவில்லை
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு காலண்டர் இயர் அகாடமிக்கு இயர் என இரண்டு வகைகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன
பல்கலைக்கழகங்களில் காலண்டர் அகாடமி கியர் என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் தேர்வர்களுக்கும் தேர்வு வாரியத்திற்கும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமைகிறது
தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் அக்டோபர் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர் மேலும் அதே ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடத்தி முடிக்கின்றனர் ஒரு வருடத்திற்கான முழு படிப்பையும் படித்து முடிக்காமல் இரண்டே மாதத்தில் தேர்வு எழுதுகின்றனர் இத்தகைய நடைமுறைகளை கைவிட வேண்டும்
பொதுவாக ஜூன் மாதம் மாணவர்கள் கல்லூரிகளில் இணைந்து அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்கள் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்
எனவே அனைத்து பல்கலைக்கழகங்களும் பத்து மாதங்கள் மாணவர்கள் படித்ததற்குப் பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து மேலும் மாணவர்கள் கல்லூரி படிப்பை எத்தனை நாட்களில் முடிகின்றனர் என்பது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்களில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்து
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்( பி.எட்) மற்றும் (எம் எஸ் சி) இரண்டு பட்டங்களையும் வெவ்வேறு ஆண்டுகளிலேயே படித்துள்ளார் என்பது தெரிய வருகிறது எனவே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மனுதாரரின் பெயரை தேர்வு பட்டியலில் இணைத்து அவருக்கான முதல் நிலை கணித ஆசிரியர் பணியை இரண்டு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion