மேலும் அறிய

தென்காசி கடத்தல் விவகாரம்: கிருத்திகாவை தாத்தாவுடன் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணை அனுப்பினால் விசாரணை பாதிக்கும் மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது - அரசு தரப்பு

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில்  பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன். இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவருடைய மகள் கிருத்திகா பட்டேல். நானும் கிருத்திகா பட்டேலும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தனர்.

தென்காசி கடத்தல் விவகாரம்: கிருத்திகாவை தாத்தாவுடன் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
 
இதனையடுத்து கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று நானும் எனது மனைவி கிருத்திகா பட்டேலும் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம். விசாரணையின் முடிவில் கிருத்திகா பட்டேல்,  என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன். இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்காக ஜனவரி 25ம் தேதி நான் என் மனைவி கிருத்திகா பட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியுள்ளாா். இந்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அப்போது நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி கிருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

தென்காசி கடத்தல் விவகாரம்: கிருத்திகாவை தாத்தாவுடன் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
 
நான் இதுகுறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், கிருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கிருத்திகா பட்டேல் கடத்தி சென்று விட்டனர். எனவே, கிருத்திகா பட்டேல் மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில்  கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணையில் அவர் பெற்றோர் உடன் செல்வதாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பில், கிருத்திகா பெற்றோர்கள் தலைமுறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கிருத்திகா பெற்றோர் வழக்கறிஞர் தரப்பில், உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கிருத்திகா உறவினர்கள் தரப்பில் அவரை அழைத்துச் செல்வதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
 
தென்காசி கடத்தல் விவகாரம்: கிருத்திகாவை தாத்தாவுடன் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
 
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அரசு தரப்பில், கிருத்திகா பட்டேலை அழைத்து செல்ல அவரின் தாத்தா சிவாஜி பட்டேல் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணை அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் கிருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் அவரை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget