மேலும் அறிய

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் குழந்தைகள் - நீதிபதிகள் வேதனை

பப்ஜி, free fire போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.- மதுரைக்கிளை நீதிபதிகள்

தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணமாக,. நமது நாடு இளம் தலைமுறையினரின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இளம் தலைமுறையினரின் உளவியல், உடல், பொருளாதாரம், சமூக  அளவில் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். ஆனால் அவற்றில் வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது, சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.  ஆகவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடுப்பதும் அவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பதும் அவசியமான ஒன்று.  இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இதனை பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. VPN செயலிகளை  முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள், செயலிகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடக் கூடாது என்பது தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, பப்ஜி, free fire போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை மட்டுப்படுத்த இயலாது ஆனால் இளையோர் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர் அரசு தரப்பில், "பப்ஜி, free fire போன்ற விளையாட்டுக்களை இளைஞர்கள் விளையாடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், " வழக்கறிஞர் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. ஆகவே இந்த வழக்கு  தொடர்பாக வழக்கறிஞர்கள் விபரங்களைத் தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர். தொடர்ந்து, "தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, google, YouTube நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப்பொதுமறையாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறள்  பிரெய்லி முறையில் வெளியிடப்படவில்லை. இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகள் அதன் சிறப்புகளை  அறிந்து இன்பம் கொள்ள இயலவில்லை. கடந்த 2017 மார்ச் 21ல் தமிழக பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ஆம் வகுப்பிற்குள் சுமார் 1050 குறள்களை அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் என அரசாணை வெளியிட்டது. ஆனால், பார்வையற்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இல்லை.  ஆகவே பார்வையற்றவர்கள்  தாங்களே படித்து, பயன்பெறும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த மனு  நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், திருக்குறள், சங்க தமிழ் இலக்கிய நூல்களும்   பிரெய்லி முறையில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக பார்வையற்றோர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். தொடர்ந்து திருக்குறள், சங்க தமிழ் இலக்கிய நூல்களைப்பிரெய்லி முறையில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக பார்வையற்றோர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்த தமிழ் வளர்ச்சி துறைக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget