மேலும் அறிய
Advertisement
அவுட்சோர்சிங் முறையில் பயிற்றுநர்கள்; தொழிலாளர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை
அரசு ஐடிஐ-க்களில் ஒப்பந்த கணினி பயிற்றுநர்களுக்கு ஒப்பந்தங்களை நீட்டிக்காமல் அவுட்சோர்சிங் முறையில் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்க தொழிலாளர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை.
அரசு ஐடிஐ-க்களில் ஒப்பந்த கணினி பயிற்றுநர்களுக்கு ஒப்பந்தங்களை நீடிக்காமல் அவுட்சோர்சிங் முறையில் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்க தொழிலாளர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தேனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
அதில், "அரசு ஐடிஐக்களில் கணினி பயிற்றுநர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பலரது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஐடிஐ பயிற்றுநர் பணியிடத்தை தனியார் ஏஜென்சி மூலம் அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் கடந்த அக்டோபர் 17ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களைப் போன்ற பலர் பாதிப்பர். எனவே, பயிற்றுநர் பணியிடத்தை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எங்களையே தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
அரசியல் கட்சி சாராதவர் என சான்றிதழ் பெறவும், கோயில் மரபு அறிந்தவர் என ஆதீனங்களிடம் சான்றிதழ் பெற்றவர்களை இந்து அறநிலையத்துறை கோவில்களில் அறங்காவலர்களாக விண்ணப்பிக்க முடியும் என உத்தரவிட கோரிய வழக்கு குறித்து தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களுக்கான அறங்காவலர் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் நபர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என தாசில்தாரின் சான்றிதழை வழங்கவும், சம்பந்தப்பட்ட கோயிலின் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்தவர் என்பதற்கான சான்றிதழை ஆதீனங்கள் மற்றும் குருபீடங்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழங்கப்படும் சான்றிதழ்கள் தவறானவை என தெரிந்தால் உடனடியாக நியமனத்தை ரத்து செய்யுமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion