மேலும் அறிய

"மதுரையில் நேற்றில் இருந்தே மழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு இல்லை" புலம்பும் பெற்றோர்கள்

மழையில் பள்ளிக்கு தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர்.

Schools Colleges Holiday (27-11-2024): கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு, விட்டு மழை பெய்துவரும் சூழலில் விடுமுறை அளிக்காதது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஃபெங்கல் எனப்படும் இந்த புயலால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்கெங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

அதிகாலை வெளியான அறிவிப்புகளின்படி,  

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை எதிரொலியாக சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் நிலை என்ன ; மதுரை மாவட்டம் பல்வேறு இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மாலைக்கு மேல் வரை மழை தொடர்ந்தது. நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் பெரும்பாலும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இரவில் இருந்து தூரல் விழுந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று 27-ம் தேதி காலையில் கூட லேசான மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கு மட்டும் கூட விடுமுறை அளிக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையில், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து மழை காலங்களில் கூட பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை, மாணவர்களை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களால் பெரும் புகாராக எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் காய்ச்சல், சளி போன்ற நோய் தொற்றுகள் பரவி வரும் சூழலில் இதுபோன்ற சூழலில் வளர் பருவத்தினர் அதிகம் கூடும் இடமான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாதது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சகதியில் சிக்கிய பெற்றோர் மற்றும் குழந்தைகள்

மதுரை வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் தனியார் பள்ளியில் தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட பைக்கில் வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறையே விட்டிருக்கலாம் என புலம்பிக்கொண்டே சென்றார். இப்படி மாவட்டத்தில் பல இடங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நொந்துகொண்டுள்ளனர்.
 
மதுரை மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம்?
 
மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் இல்லையா? அல்லது மாவட்ட ஆட்சியர் சங்கீதா முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறாரா? என்ற எந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget