மேலும் அறிய
விஜய் பட பேனர் சர்ச்சை: தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து.. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!
தவெக நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு. எட்டு நபர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கோட் திரைப்பட போஸ்டர்
Source : twitter
தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவாகாரத்தில் தவெக நிர்வாகிகள் 8 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கோட் திரைப்படத்திற்கு தேனியில் வைக்கப்பட்ட பேனர்
உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் விஷ்ணு தாக்கல் செய்த மனுவில்..,” நான் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவில் உள்ளேன். எங்கள் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் (GOAT கோட்). இந்தத் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் தேனி மாவட்டம் தென்கரை பகுதியில் வைத்திருந்தோம். பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காட்டு ராஜா, நாங்கள் சட்ட ஒழுங்கு கெடுக்கும் விதமாக சாலைகளில் பிளக்ஸ் பேனர் வைத்திருப்பதாக, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் என் மீதும் தேனி மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி, உள்ளிட்ட எட்டு பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர் வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி. இந்தப் படத்திற்கு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலும் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை காவல்துறையினர் கடைபிடிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு சட்டவிரோதமானது ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி தவெக நிர்வாகிகள் எட்டு பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















