மேலும் அறிய
சிவகங்கை மோதல்: சமூக அடையாள பலகை தகராறு.. 115 பேர் மீது வழக்கு, இரு மாவட்டங்களிலும் பரபரப்பு!
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸிடம் வாக்குவாதம்
Source : whatsapp
இளமனூரில் சமூக அடையாள பலகை விவகாரத்தில் மோதல் – மூவர் காயம்; 115 நபர் மீது வழக்கு இரு மாவட்டங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினர் இடையே மோதல்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இளமனூர் காலனி பகுதியில் சமூக அடையாள பலகை நிறுவலைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்தனர். அப்பகுதியில் ஏற்கனவே ஒரு சமூகத்தினர் தங்களது தலைவரின் பெயரில் பலகையை நிறுவியிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சித்ரா (38) என்பவர் மற்றும் சிலர் மற்றொரு தலைவரின் பெயரில் புதிய பலகையை அதற்கருகே நிறுவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் சித்ரா, முருகேசன், முனியாண்டி ஆகியோர் காயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் இளையான்குடி காவல்துறையினர் இளமனூர் பகுதியைச் சேர்ந்த பாண்டி, சத்தியேந்திரன் உள்ளிட்ட 115 நபர்கள்மீது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பிரிவினரை சேர்ந்த 115 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தும் நிலையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இரு மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என, காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறுப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















