மேலும் அறிய
Advertisement
Madurai Hc: முதல்முறை சிறைக்கு வருபவர்களை தனியாக வைக்க என்ன ப்ளான் இருக்கு? - நீதிபதி கேள்வி
முதலில் சிறு வழக்கில் சிறை போரவன் அங்கே உள்ள மொத்த கஞ்சா வியாபாரியிடம் பழகி பெரும் குற்றவாளி ஆகிவிடுகிறான் - நீதிபதி வேதனை.
சிறை வரும் முதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும். தற்போது ஒன்றாக வைக்கும்போது பழைய குற்றவாளிகளுடன் இணைந்து தொடர் குற்ற வாளியாக மாறிவிடுகின்றனர்.- நீதிபதி.
முதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏன்று ஏதேனும் திட்டங்கள் உள்ளதா அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஜாமீன் மற்றும் முன் ஜாமின் மனுக்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார். வழக்கு விசாரணையின் போது கடந்த வாரம் சில மனுக்களை விசாரணை செய்த போது, கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த நீதிபதி இவர்களுக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் மீண்டும் 2-வது குற்றவாளியாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை செய்தார், அப்பொழுது சில அதிர்ச்சியான தகவல் வெளியானது. முதல் குற்றவாளியாக கைது செய்யப்படுபவர்கள் சிறைச்சாலையில் அடைக்கும் போது ஏற்கனவே தொடர் குற்ற வழக்குகளில் கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களோடு தொடர்பு ஏற்பட்டு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேரில் ஆஜர்
எனவே இது குறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமாரை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். விசாரணையில் சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்பொழுது சிறைத்துறை டிஐஜி பழனி குமார் நீதிமன்றத்தில் முதல் குற்றவாளிகளை வயது வாரியாக பிரித்து மதுரை சிறையில் வைத்து வருகிறோம் என தெரிவித்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அப்பொழுது நீதிபதிமுதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? தண்டனை பெற்ற குற்றவாளிக்கு தனியாக வைக்க வேண்டும். தற்போது ஒன்றாக வைக்குபோது பழைய குற்றவாளிகள் இணைந்த தொடர் குற்ற வாளியாக மாறிவிடுகின்றன. தற்போது தாழுகாவில் உள்ள துணை சிறையில் வைக்க ஏற்பாடு செய்யலாம். இதில் கஞ்சா குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும். முதலில் சிறு வழக்கில் சிறை போரவன் அங்கே உள்ள மொத்த வியாபாரியிடம் பழகி பெரும் குற்றவாளி ஆகி விடுகிறான். எனவே இளைஞர்களை பாதுகாக்கும் விதமாக தமிழக முழுவதும் சிறைகளில் முதலில் குற்ற செயல் குறித்து சிறை வருபவர்களை தனியாக சிறையில் அடைக்க ஏதேனும், அரசு தரப்பில் ஏற்பாடுகள் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினர். அவ்வாறு இருந்தால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக்கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - களைகட்டும் விநாயகர் சதுர்த்தி! பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion