மேலும் அறிய
குணா குகை கண்காட்சி: பாதுகாப்பு குறைபாடு, சுகாதார சீர்கேடு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு? நாளை விசாரணை!
குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

மதுரை குணா குகை
Source : whats app
தீயணைப்புத் துறை அதிகாரிகள், குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப் பதிவு
மதுரை ஐயர்பங்களா பகுதியில் நடைபெறும் குணா குகை கண்காட்சியில் முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கு. போதிய வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. குகை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படவில்லை என மாநகராட்சி பிறப்பில் அறிக்கை தாக்கல்.
மதுரையில் குணா குகை கண்காட்சி
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சபீனா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை ஐயர்பங்களா பகுதியில் "குணா குகை கண்காட்சி" செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அங்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. ஆகவே மதுரை ஐயர்பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?
இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, " பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? மிகவும் நெருக்கடியான சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறை தென் மண்டல மதுரை இயக்குனர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
போதிய வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், போதிய வசதி இல்லாமல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. குகை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து , தீயணைப்புத் துறை சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. ஏன் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகள், குணா குகை கண்காட்சி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















