மேலும் அறிய
காந்தி ஜெயந்தி: மதுரையில் தடையை மீறி இறைச்சி விற்பனை.. 60 கிலோ பறிமுதல், கடும் அபராதம்
காந்தி ஜெயந்தி நாளில் மதுரை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ இறைச்சி பறிமுதல் - அபராதம் விதிப்பு.

இறைச்சிக்கடைக்கு அபராதம்,
Source : whats app
காந்தி ஜெயந்திநாளில் மதுரை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை
காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் விற்பனைக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டு, கூடல் நகர் பகுதியில் இறைச்சிக் கடையை திறந்து வைத்து விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வுக்கு சென்ற சுகாதார ஆய்வாளர் முருகன் நந்தகுமார் அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். பின்னர் இறைச்சி மீது பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது.
5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து தடையை மீறி இறைச்சி விற்பனை செய்ததாக கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி நாளில் மதுரை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















