மேலும் அறிய
மதுரை கண்மாய்களில் மீன்பாசி குத்தகை: 143 கண்மாய்களுக்கு இ-டெண்டர் அறிவிப்பு.. மீனவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
கண்மாய்களுக்கும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலமாக மீன்பாசி குத்தகை விடுவதற்கு கடந்த மே 29ஆம் தேதி, ஆகஸ்டு 8ம் தேதி, மற்றும் செப்டம்பர் 22ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர்
Source : whatsapp
தற்போது தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு விற்பனைத் திட்டத்தின் கீழ் 128 கண்மாய்களுக்கும், மதுரை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழுள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 143 கண்மாய்களுக்கு மின்னணு மறுஒப்பந்தப்புள்ளி (e-tender) வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளது.
48 கண்மாய்கள் குத்தகைக்கு விடப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 143 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார், தெரிவித்தார். மதுரை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு விற்பனைத் திட்டத்தின் கீழ் 166 கண்மாய்களுக்கும், மதுரை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் 25 கண்மாய்களுக்கும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலமாக மீன்பாசி குத்தகை விடுவதற்கு கடந்த மே 29ஆம் தேதி, ஆகஸ்டு 8ம் தேதி, மற்றும் செப்டம்பர் 22ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் 48 கண்மாய்கள் குத்தகைக்கு விடப்பட்டன.
e-tender) வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளது
இந்த நிலையில் தற்போது தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு விற்பனைத் திட்டத்தின் கீழ் 128 கண்மாய்களுக்கும், மதுரை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழுள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 143 கண்மாய்களுக்கு மின்னணு மறுஒப்பந்தப்புள்ளி (e-tender) வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளது.
இதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் மேற்படி 143 கண்மாய்களுக்கான மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் (e-tender) வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பேச்சியம்மன்படித்துறை, சிம்மக்கல், மதுரை-625001 என்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















