மேலும் அறிய
Advertisement
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோதலால் மரபை மீறி நடைபெற்ற மாமன்ற நடவடிக்கை
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோதலால் மாநகராட்சிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து மார்க்சிஸ்ட் கட்சி துணை மேயர் நாகராஜன்.
மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர் - மேயரின் அருகே அமர்ந்தபடி பேசியபோது பேச்சை நிறுத்துமாறு கூறிய திமுக மாமன்ற உறுப்பினர்.
மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம்
மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணைமேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசியபோது, பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வாரிருக்க வேண்டும், நாம் கவன குறைவாக இருந்துவிட்டோம். செல்லூர் கண்மாய் நிரம்பி வழிவதை வைகை ஆற்றுக்குள் செல்ல கூடுதலாக ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும். 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது. மாநகராட்சி நிதி பற்றாக்குறை நெருக்கடி அதிகமாக உள்ளது. மாநகராட்சியில் 36 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வரி பாக்கி உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேலாக பாக்கி வைத்துள்ளார்கள்.
சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது. மாநகராட்சி வாரச் சந்தைகளால் கிடைக்கும் வருவாய் 10 இல் 1% சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர். ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் "மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்னைகளை பேச முடியும்" என கூறினார். இதனையடுத்து துணை மேயர் நாகராஜன் தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். மேயரின் அருகே அமர்ந்த துணை மேயர் பேசும்போது, மாமன்ற உறுப்பினர் பேசக்கூடாது என மரபு மீறிய செயல்களில் ஈடுபட்ட நிலையிலும் வேடிக்கை பார்த்த மேயர். திமுக - மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோதலால் மாநகராட்சிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து மார்க்சிஸ்ட் கட்சி துணை மேயர் நாகராஜன்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
நிதி மேலாண்மை
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion