மேலும் அறிய
Advertisement
Diwali 2024: தீபாவளி பண்டிகை; மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து மாற்றம்
தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள், வியாபார சங்க பிரமுகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
நடப்பாண்டில் தீபாவளி அக்டோபர் 31-ஆம் தேதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகள் வாங்குவதையும், பட்டாசுகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி - போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மாநகர்ப் பகுதிகளில் வருகிற 28-ஆம் தேதி முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை மாநகரப்போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளிப் பண்டிகையை யொட்டி, மதுரை மாநகரில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலகுரக சரக்கு வாகனங்கள் பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள் ஆகிய பகுதிகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். மேலும், வருகிற 28-ஆம்தேதி பகலில் மதுரை நகருக்குள் மகால் சாலை, கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
புறவழிச்சாலை
மேலும், புறவழிச் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடி சாலை, கே.கே. நகர் 80 அடி சாலை, அழகர்கோவில் சாலையில் மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் சாலை, ஐயர் பங்களா சந்திப்பு, திண்டுக்கல் சாலை கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை சுற்றுச்சாலை சந்திப்பு, மீனாட்சிமிஷன் மருத்துவமனை சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நகருக்குள் நுழைய லாரிகள், கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் (அக். 29) காலை 6 மணி வரை மட்டுமே இந்த வாகனங்கள் அனுமதிக்கப்படும். மேலும், அக். 29, 30 ஆகிய தேதிகளில் பகல், இரவு நேரம் முழுவதும் மதுரை மாநகருக்குள் இந்தச் சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. இந்த நாள்களில் பொதுமக்களின் நலன் கருதி நேதாஜி சாலை, மேல மாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழ மாசிவீதி, மேல ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூலவீதி, தெற்கு ஆவணி மூலவீதி ஆகிய பகுதி களில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனு மதி இல்லை. அவசியமெனில், இரு சக்கர வாகனப் போக்குவரத் தும் தடை செய்யப்படும். மகால் சாலை, கீழமாரட் வீதிகள் வழி யாக வாகனங்கள் செல்ல அனு மதிக்கப்படும். ஆனால், எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த தற்காலிக போக்குவ ரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள். வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள், வியாபார சங்க பிரமுகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Diwali 2024: நெருங்கும் தீபாவளி! புத்தாடைகள், பட்டாசுகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி அண்ணாச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion