மேலும் அறிய
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உதவிகளை அரசிடமிருந்து பெற எளிமையான வழிமுறை இதுதான்
அரசிடமிருந்து எளிய முறையில் பெற, கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் நேரடியாகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

பெண்கள்
பதிவு செய்யும் உறுப்பினர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளான சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பயன்பெறலாம்.
எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் பயன்பெறலாம்
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென உருவாக்கப்பட்ட www.tnwidowwelfareboard.tn. gov.in வலை பயன்பாட்டின் (Web Application) மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, மேற்படி இணையதளம் மூலம் நேரடியாகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம் என தெரிவிக்கப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது
மேலும், பதிவு செய்யும் உறுப்பினர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளான சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் போன்ற இன்னபிற உதவிகளை எளிதாக பெற்றுக் கொள்ள வசதியாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரம் ஜூன் 16, திருமங்கலம் ஜூன் 18, டி.கல்லுப்பட்டி ஜூன் 19, திருப்பரங்குன்றம் ஜூன் 20, சேடப்பட்டி ஜூன் 23, உசிலம்பட்டி ஜூன் 24, வாடிப்பட்டி ஜூன் 25, மேலூர் ஜூன் 26, அலங்காநல்லூர் ஜூன் 27, கொட்டாம்பட்டி ஜூன் 30, மதுரை கிழக்கு ஜூலை 2, செல்லம்பட்டி ஜூலை 3, மதுரை மேற்கு ஜூலை 4 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு பயனடையலாம்
எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் முகாம் நடைபெறும் நாள்களில் விதவை சான்றிதழ், ஆதரவற்ற பெண்கள் சான்று, கணவனால் கைவிடப்பட்ட சான்று, வருமானச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், புகைப்படம் 2 மொபைல் எண் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டுபயனடையலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















