மேலும் அறிய
மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை - அச்சத்தில் மக்கள்
சவால் விட்டு அஜய்குமாரை கொலை செய்த சம்பவத்தால் பழிக்குபழி கொலை சம்பவம் அதிகரிக்குமோ? என பொதுமக்கள் அச்சம்.

கொலை செய்யப்பட்ட நபர்
Source : whats app
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி கும்பலைச் சேர்ந்த ரவுடி குட்டிசாக்கு (எ) அஜய் பிரசன்ன குமாரை கதவை உடைத்துசென்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல் - 3 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை.
கொலை சம்பவம்
மதுரை கரிமேடு சகாய மாதா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த குட்டிசாக்கு அஜய்குமாரின் நண்பரான தனசேகரன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி விட்டதாக கூறியதால் அஜய் குமார் தனசேகரனை அழைத்துசென்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் ஆனது அஜய்குமாரின் வீட்டிற்கு வந்து அவரது தாயாரிடம் உனது மகனை ஒழுங்காக இருக்க சொல் என எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஜய்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் சென்ற மர்ம கும்பலானது கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிய அஜய்குமாரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
வெள்ளைக்காளியின் ஆதரவாளர்
இதனையடுத்து வீட்டிற்குள் அஜய்குமாரின் தாயார் வந்தபார்த்தபோது, அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அஜய்குமாரின் குடும்பத்தினர் கரிமேடு காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜயகுமாரின் உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் அஜய்குமாரின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட குட்டிசாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பழிக்கு பழி?
தனது தம்பி சிறையில் இருந்த போது வெளியில் வந்தால் கொலை செய்து விடுவோம். என, ஒரு கும்பல் ஜெயிலுக்குள்ளேயே மிரட்டியதாகவும் அதே கும்பல்தான் தனது சகோதரனுக்கு போதையை ஏற்றிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்து தனது தம்பியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர் என கொலையுண்ட அஜய் குமாரின் சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த அஜய்குமார் வீட்டிற்குள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவம் நடைபெறும். என, அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே அஜய்குமார் கொலை தொடர்பாக பழக்கடை சுந்தர்(38) தனது சகோதரர் தொத்தா சுந்தர்(36) மற்றும் அவரது பாண்டியராஜன்(26) ஆகிய மூன்று பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கரிமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
கல்வி
மொபைல் போன்கள்





















