மேலும் அறிய
Advertisement
மதுரை : விலங்குகள் மீது தொடரும் கொடூர வன்முறை : கடுமையாக எச்சரித்த ஆட்சியர்..!
விலங்குகள் மீது துன்புறுத்தல் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கால்நடைகள் மீதான வன்முறை தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தது. மதுரை நகர் பகுதியில் இருந்து அழகர்கோயில் செல்லும் சாலையில் தல்லாக்குளம், கே.புதூர், சூர்யா நகர்பகுதிகளும் மற்றும் ஆனையூர், கண்ணனேந்தல், அய்யர்பங்களா என நகர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாலையில் செல்லும் பசு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அதிக திறன் கொண்ட ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றுவதால், மாடுகள் படுகாயமடைந்து சாலையில் ரத்த காயங்களுடன் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்பட்டது.
கூடுதல் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் -மதுரை ; 'அப்போ மயில்கள், இப்போ மாடுகள்’ - வாயில்லா ஜீவன்கள் மீது ஆசிட் வீச்சு!
இது குறித்த செய்தி வெளியான பின் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில்," மதுரையில் சில இடங்களில் விலங்குகள் மீது பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் நடைபெறுவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் நபர்கள் மீது, விலங்குகள் வதைத்தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும். பின் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும்.
விலங்குகளின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அதனை துன்புறுத்தும் விதமாக அடித்தல், காயங்கள் ஏற்படுத்துதல், அல்லது காயங்கள் ஏற்பட காரணமாய் இருத்தல், வாகனங்கள் மூலம் மோதி விபத்து ஏற்படுத்துதல், விஷம் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது விலங்கு வதை சட்டத்தின் உட்பட்டும். மேலும், அடிப்படை வசதிகள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் விலங்குகளை வாகனங்களில் ஏற்றி இறக்குதல், விலங்குகள் நலவாரியத்தின் விதிகளை மீறி வாகனங்களில் விலங்குகளை கொண்டு சென்றால் விலங்குகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர், விலங்கு உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்" என எச்சரித்துள்ளார்.
மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர், "எந்த தவறும் செய்யாத வாயில்லா ஜீவன்கள் மீது ஆசிட் வீசிய சம்பவம் கொடூரத்தின் உச்சம். எனவே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கண்காணித்து அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் இது போன்ற செயல்களை தவிர்க்க முடியும்" என்றனர்
மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரியுமா ? -TN Corona Update: மதுரையில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
அரசியல்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion