மேலும் அறிய

Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு

மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலியை வைத்திருப்பதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அமைச்சர் செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், திமுக அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த குற்றத்தை தடுத்திருக்கலாம் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மாணவி விவரங்களுடன் வெளியான முதல் தகவல் அறிக்கை

இதில் அடுத்த திருப்பமாக, சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியானது. இதற்கு அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மாணவிகள்‌ காவல்‌ உதவி செயலியை தங்கள்‌ செல்போன்களில்‌ பதிவிறக்கம்‌ செய்வதை அனைத்துக்‌ கல்லூரிகளும்‌ உறுதி செய்ய வேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை அமைச்சர்‌‌ கோவி.செழியன்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:

பெண்கள்‌ சுதந்திரமாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும்‌ அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்‌, ஆபத்துக்‌ காலங்களில்‌ உடனடியாக காவல் துறையைத் தொடர்புகொள்ள உதவும்‌ 'காவல்‌ உதவி’ செயலியை அனைத்துப்‌ பெண்களும்‌ குறிப்பாக மாணவிகள்‌ தங்கள்‌ செல்போன்களில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

அவசர காலங்களில்‌ என்ன செய்ய வேண்டும்?

அவசர காலங்களில்‌ 'சிவப்பு நிற அவசரம்‌' என்ற பொத்தானை அழுத்துவதன்‌ மூலமாக, பயனாளர் விவரம்‌, தற்போதைய இருப்பிட விவரம்‌ மற்றும்‌ வீடியோ, கட்டுப்பாட்டு அறையில்‌ பெறப்பட்டு காவல்துறையின்‌ அவசர சேவை வழங்கப்படும்‌.

எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?

மாணவிகள்‌ காவல்‌ உதவி செயலியை தங்கள்‌ செல்போன்களில்‌ பதிவிறக்கம்‌ செய்வதை அனைத்துக்‌ கல்லூரிகளும்‌ உறுதி செய்ய வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இந்த செயலியை Google Play Store, App Store-ல் இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌’’.

இவ்வாறு அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

பெண்களும் மாணவிகளும் https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=ta என்ற இணைப்பை க்ளிக் செய்து, காவல் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget