Madurai Rain: மதுரையை மிரட்டிய மழை..! சூறாவளி காற்று... 50க்கும் மேற்பட்ட இடங்களில் முறிந்த மரங்கள்..!
மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காணப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 0530 மணி அளவில் (09.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை (10.05.2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும்.
மதுரை மாநகரில் கன மழை 🌧️@ChennaiRains @kalyanasundarsv @Gopikrishna83_ @Muralid45036853 @RainStorm_TN @praddy06 pic.twitter.com/K5TKA9Q1Nz
— Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726) May 9, 2023
கனமழை:
இது 11.05.2023 வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
மதுரை மாநகரின் பகுதிகளான தல்லாகுளம் கோரிப்பாளையம் , அவுட் போஸ்ட் சிம்மக்கல் , மாட்டுத்தாவணி ,அண்ணா பேருந்து நிலையம் , ரயில்வே நிலையம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாநகர் முழுவதிலும் மாலை 4 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
ஒரு சில இடங்களில் சூறாவளி காற்று வீசுவது போல காற்று பலமாக வீசிய நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் பூங்காக்களில் இருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் காற்றில் சாய்ந்து விழுந்தன இதே போன்று தமுக்கம் தல்லாகுளம் கேகே நகர் , அண்ணாநகர் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக என பல்வேறு பகுதிகளிலும் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் மின்கம்பங்கள், தொலைபேசி இணைப்பு கம்பங்களும் ஆங்காங்கே சாலைகளில் சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
மதுரை மாநகரின் பகுதிகளான தல்லாகுளம் கோரிப்பாளையம் , அவுட் போஸ்ட் சிம்மக்கல் , மாட்டுத்தாவணி ,அண்ணா பேருந்து நிலையம் , ரயில்வே நிலையம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாநகர் முழுவதிலும் மாலை 4 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.#madurai @abpnadu
— arunchinna (@arunreporter92) May 9, 2023
@SRajaJourno @athens_south pic.twitter.com/dAChraq1J3
பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான மரங்கள் சாலைகளில் விழுந்த நிலையில் அதனை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் வரை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் திடீரென கனமழை பெய்து பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழ தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மரங்களிற்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காணப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்