மேலும் அறிய
Advertisement
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட 998 நபர்கள் மீது வழக்குப்பதிவு !
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றும் 648 ஆண்கள், 350 பெண்கள் என மொத்தம் 998 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.கவை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறுஅணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் தி.மு.க அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும், முல்லைப்பெரியாறு அணையால் பயன்பெறும் 5 மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. கம்பத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதனும் போராட்டம் நடத்தினர். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திருமகலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட செயலர்கள் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்போராட்டம் நடத்தி அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளதாக கூறியும், தமிழக அரசு 142 அடியை தேக்குவதற்கு இன்றைக்கு பல்வேறு இடையூறுகளை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளதோடு, அதைக் கண்டும் காணாமல் இருப்பது போல் தமிழக அரசின் நிலைப்பாடு உள்ளது. இதை தமிழ்நாடு மக்களுக்கு நினைவுப்படுத்த 5 மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை உறுதிப்படுத்த, அ.தி.மு.க சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 5 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் 144 தடையை மீறியும், அனுமதியின்றியும் போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றும் 648 ஆண்கள், 350 பெண்கள் என மொத்தம் 998 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion