மதுரையில் வழிப்பறி புகாரில் சிக்கிய முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் டிஸ்மிஸ் - டிஐஜி பொன்னி உத்தரவு
வழிப்பறி வழக்கில் முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் ஆய்வாளர் வசந்தி நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார்.
மதுரையில் வழிப்பறி வழக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் வசந்தி டிஸ்மிஸ் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி., பொன்னி உத்தரவிட்டுள்ளார். சாட்சிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு. ( வீடியோ கோப்புக் காட்சி)#madurai | #vasanthi | #Police @SRajaJourno #abpnadu pic.twitter.com/5EE0MlhjQD
— arunchinna (@arunreporter92) April 13, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்