மேலும் அறிய
மதுரையில் பயங்கரம்; யாசகம் எடுப்பதில் போட்டி? - தலையில் கல்லைப் போட்டு கொடூர கொலை
மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.

கொலை நடந்த இடம்
Source : whats app
மதுரை மாநகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் போதையில் இரண்டு யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரது தலையில் மற்றொரு யாசகர் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்
மதுரை மாநகர் பகுதியான நேதாஜிசாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் முருகன் கோயில் அருகே உள்ள ஜூஸ் கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் தலையில் காயதுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது போதையில் தலையில் அடிபட்டு உயிரிழந்து உள்ளாரா..? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
யாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளனர்
தொடர்ந்து, அங்குள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணி கடைகளில் முன்புள்ள CCTV கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு யாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் போதையில் தகராறில் ஈடுபட்டதும், அதில் ஆத்திரத்தில் அருகில் உள்ள கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததும் பதிவாகி இருந்தது. மேலும் இறந்த நபர் மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயது மாயக்கண்ணன் என்பதும் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள், வீதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாயக்கண்ணனை கொலை செய்த மற்றொரு யாசகர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நூற்றுக்கணக்கான யாசகர்கள் தினமும் கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் அங்கு சுற்றியுள்ள வீதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவரும் நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் மதுபோதையில் நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜூஸ் கடை முன்பு இரண்டு யாசகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவத்தில் மற்றொரு யாசகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மைக்கில் பீப் சவுண்ட், உங்க ஏரியாவிற்கு வரும்போது இத பண்ணுங்க.. அமைதியான கள ஆய்வுக் கூட்டம் களேபரம் ஆனது எப்படி?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion