மதுரையில் நள்ளிரவில் நடந்த விபத்து; சாரம் சரிந்து விழுந்து 4 பேர் காயம்
பாலம் உள்ளிட்ட பெரிய கட்டுமானங்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் - என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்ததில், 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் போக்குவரத்தை குறைக்க பாலங்கள்
மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி, காளவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், அண்ணா பேருந்துநிலையம், பால்பண்ணை சிக்னல், தெப்பக்குளம் பகுதி, அய்யர்பங்களா என பல இடங்களில் வாகனங்கள் அடிக்கடி ஊர்ந்து செல்லும் காட்சியை தான் பார்க்க முடிகிறது. போக்குவரத்தி நெரிசலை குறைக்க பல இடங்களில், பாலம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நத்தம் பாலம், காளவாசல் பைப்பாஸ் பாலம், வைகை ஆற்றில் புதிய பாலம் என பல பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பலோ சிக்னல் - பால்பண்ணை சிக்னல் வழியாகவும், தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வழியாக வைகை ஆற்றை கடக்கும்வரை பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் பாலம் பகுதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் சாரம் சரிந்ததில் 4 தொழிலாளர்கள் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நத்தம் பாலம் கட்டுமான பணியின் போது தொழிலாளர் ஒருவர் இறந்த சூழலில் தற்போது கோரிப்பாளையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ