மேலும் அறிய
மதுரையில் 6 ஆண்டுகளில் 542 விபத்துக்கள், 137 பேர் மரணம் - அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
நீதிமன்றத்தில் ஆஜராகாத நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மோகன் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை-திண்டுக்கல் சமயநல்லுார் சாலையில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயங்கள் அடைந்ததாக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. விபத்து தடுப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சமயநல்லுார் பகுதியில் அடிக்கடி விபத்து
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்...,” மதுரை-திண்டுக்கல் சாலையில் சமயநல்லுார் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. இதன்காரணமாக இப்பகுதி மக்கள் சாலையை கடப்பது, வாகனங்களை இயக்குவதில் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சமயநல்லூர் பகுதியில் வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் கடந்த 2018 முதல் தற்போது வரை இந்த பகுதியில் நடைபெற்ற விபத்துகள் எத்தனை அதில் காயமடைந்தோர், இறந்தவர்கள் எத்தனை பேர் என்ன அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து. மேலும் இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள்
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை தரப்பில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை நடைபெற்ற விபத்து குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதை 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயங்கள் அடைந்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன் காந்தி நேரில் ஆஜர் ஆகவில்லை. கோபம் அடைந்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion