மேலும் அறிய
Advertisement
Madurai: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இதுதான் வழி! - ஐடியா கொடுக்கும் ஆர்.பி.உதயகுமார்
காவல்துறையை இடமாற்றம் செய்யாமல், சுதந்திரமாக செயல்படவிட்டால் தான் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியும் - ஆர்.பி.உதயகுமார்.
மதுரை கப்பலூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது, ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது. இது திமுக ஆட்சியின் அலட்சிய போக்கே காரணமாகும். ஏற்கனவே மரக்காணத்தில் 22 பேர் பலியான சம்பவத்தில் பாடம் கற்றுக்கொண்டு முதலமைச்சர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கோட்டை விட்டுவிட்டார். தற்பொழுது கூட விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயத்தால் ஒருவர் பலி ரெண்டு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயத்தை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழித்து விடுவேன், என்று முதலமைச்சர் வாயால் வடை சுடுவது போல் சொல்லாமல் செய்து காட்ட வேண்டும் என்று, தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கஞ்சாவை ஒழிக்க என்று திட்டத்தை அறிவித்தார்கள் ஆனால் கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. கள்ளச்சாரய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
மூதாட்டிகள் படுகொலை
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என செய்திகள் வராத நாளே இல்லை. ஆனால் இன்றைக்கு காவல்துறை விஐபி தரவரிசை போல 4000 ரவுடிகளை ஏ,பி,சி, என்று தரம் பிரித்து பட்டியல் வெளியிடுகிறார்கள். உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்னை தீர்ந்து விடாது. காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் சுதந்திரமாக செயல்படவிட்டால் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட முடியும். மதுரையில் நகைக்காக மூன்று முதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டார்கள் இதுவரை துப்பு துலக்க வில்லை.
மணல் கொல்லை
தமிழகத்தில் கனிமவளை கொள்ளை நடைபெற்று இருக்கிறது. இந்த நிமிடம் வரை தமிழகத்தின் முதலமைச்சரோ, அரசோ வாய் திறக்கவில்லை. அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இதுகுறித்து அபிடவுட்தாக்கல் செய்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது.190 ஹக்டேரில் 28 இடங்களில் மணல் அள்ளிக் கொள்ள அனுமதி புறப்பட்டது. ஆனால் 987 ஹக்டேர் மணல் அள்ளி உள்ளார்கள் மணல் அள்ளுவதற்கு முன்பும்,மணல் அள்ளப்பட்ட பின்பும் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை அமலாக்கதுறை வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக 25.4.2024 அன்று கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அமலாக்கத்துறை கணக்கின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சட்ட விரோதமாக மணல் அள்ளிய மதிப்பு ஏறத்தாழ 4,730 கோடி ஆகும் ஆனால் அரசுக்கு வருவாய் 36.45 கோடி தான் செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த நிமிடம் வரை முதலமைச்சரும், அரசின் தரப்பின் விளக்கம் சொல்லவில்லை. தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருகிறார். இனி மௌனம் விரதம் இருக்காமல், வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாய் திறக்க வேண்டும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IND Vs Pak Legends Champions: போடு வெடிய..! பாகிஸ்தான் அப்டினாலே அடிப்போம் - லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion