மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில், தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகளின் பட்டியல்..
பாளையங்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் ஶ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள இடத்தை போலிஆவணம் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ததாக சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
காரைக்குடியில் கெட்டுப்போன 10 கிலோ ஆடு, கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரமற்ற முறையில் ரஸ்குகள் தயாரிந்த பேக்கரியை அதிகாரிகள் பூட்டினர்.
மதுரை மாநகராட்சியில் முறைகேடாக பதவி உயர்வு பெற்ற சிவபாக்கியம் என்பவர் சட்ட அலுவலராக செயல்பட தடைவிதிக்க கோரி வழக்கு. வழக்கிற்கு தேவையான மேலும் சில ஆவணங்கள் மற்றும் உத்தரவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
விருதுநகர்- கோவை இடையே மின் திட்டத்திற்கு உயரழுத்த மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்க தடைகோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.
நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு முன்பே ஓராண்டு முடிந்து மறு அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்ட கேள்விக்கு, "பயிர்க்கடனில் ஏற்கனவே 2393 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது, அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் சொல்லியுள்ளோம். அதேபோல நகைக் கடனிலும் நிறைய முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. தொடர்ந்து 6,000 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார் அதன்படி தகுதி உள்ளவர்களை ஆய்வு செய்து வழங்கப்படும். நகை கடனில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து உரிய ஏழை எளியவர்களுக்கு 5 பவுன் வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக தள்ளுபடி கிடைக்கும்" என தெரிவித்தார்.
மழைக்காலம் வரவுள்ள நிலையில் மழை மற்றும் புயல்களுக்கான ஆயத்த நிலை குறித்து பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருடம் மதுரையில் செய்தியாளர் கேட்டபோது, "சாதாரணமாக பெய்யக்கூடிய மழையின் அளவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஆண்டுக்கான கணக்கு எடுத்து அதை சரி செய்து கொள்வார்கள். புயல் வரும் பட்சத்தில் எதிர் கொள்வதற்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது” என்றார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயலில் ராமசாமி என்பவர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள், முதுகில் அலகு குத்தி அதில் கயிற்றைக் கட்டி ஆம்னி வேனை இழுத்தபடியே காவடியையும் சுமந்து கிரிவலம் வந்து மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். உலகெங்கும் கொரோனா வைரசால் மக்கள் அல்லல்படும் அதிலிருந்து விடுபட வேண்டும் எனவும் உலக நலன் கருதி தனது நேர்த்திக்கடனை செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.
பாளையங்கோட்டையில் கடந்த 15-ம் தேதி இரவில் அப்துல்காதர் என்ற வாலிபர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட் டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் படுகொலை சம்பவம் நடைபெற்ற என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்துல் காதர் கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பாலமுருகன், செல்லப்பா, மாதேஸ்வரன், காளியப்பன், ஆகிய 4 பேர் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32673-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 9 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31901-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 633 இருக்கிறது. இந்நிலையில் 139 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion